என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குழந்தைகள் பலி"
ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்னும் தலீபான் பயங்கரவாதிகளின் வெறிச்செயல்கள் முடிவுக்கு வந்தபாடில்லை. அங்கு பரவலாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் அவர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அங்குள்ள ஹெராத் மாகாணம், ஒபே மாவட்ட நிர்வாக அலுவலகத்தின் அருகே நேற்று மோட்டார் சைக்கிளில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பால் அந்தப் பகுதியே குலுங்கியது.
மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரியின் கார், சம்பவ இடத்தை கடந்து சென்றபோது குண்டு வெடிப்பு நடந்தது. அப்போது அந்தப் பகுதியில் இருந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர். எனினும் இந்தக் குண்டுவெடிப்பில் 5 குழந்தைகள் பலியானதாகவும், 20 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
இந்த குண்டுவெடிப்பு குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு படையினரும், பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களில் மாவட்ட ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த குண்டு வெடிப்பில் மாவட்ட நிர்வாக அதிகாரியின் வாகனமும், பொது மக்களின் வாகனங்களும் சிக்கி சேதம் அடைந்தன.
இந்த குண்டு வெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் தலீபான் பயங்கரவாதிகள்தான் இந்த குண்டுவெடிப்பை நடத்தி இருக்கக்கூடும் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு குண்டூஸ் மாகாணத்தின் தலைநகரான குண்டூஸ் அருகே ஆக் மஸ்ஜித் பகுதியில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்குமிடத்தை குறிவைத்து ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 6 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
ஜப்பானின் ஷிகா பிராந்தியத்தில் உள்ள ஓட்சு நகரில் மழலையர் பள்ளி உள்ளது. நேற்று காலை இந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் 3 பேர், 10-க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு அருகே உள்ள சாலையோர நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, அந்த சாலையில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று மற்றொரு கார் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி, தறிக்கெட்டு ஓடிய கார் சாலையோரமாக நடந்து சென்ற மழலையர் பள்ளி மாணவர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.
இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். சிலர் கார் சக்கரத்தில் சிக்கி நசுங்கினர். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
அங்கு 2 குழந்தைகள் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 3 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்துக்கு காரணமான 2 கார்களை ஓட்டி வந்த 62 மற்றும் 52 வயதான 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
கடந்த மாதம் தலைநகர் டோக்கியோவில் 82 வயதான முதியவர் ஓட்டிய கார் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்ததில் ஒரு பெண் மற்றும் அவரது 2 வயது குழந்தை பலியானது நினைவுகூரத்தக்கது. #Japan #KinderGarden #CarAccident
டென்மார்க் நாட்டின் தொழிலதிபர் ஆன்ட்ரசன் ஹாவல்க் பாவல்சன் (வயது 46). இவருக்கு நான்கு குழந்தைகள்.
போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலின்படி டென்மார்க் நாட்டின் முதல் பணக்காரர். பல்வேறு தொழில் நிறுவ னங்கள் உள்ளன. இவரின் சொத்து மதிப்பு சுமார் 50 ஆயிரம் கோடி.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கை நாட்டுக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்து இருந்தார். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் ஆன்ட்ரசனின் நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
இந்த தகவலை ஆண்ட்ரசனுக்கு சொந்தமான பாவன்சன்’ஸ் பேஷன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார். குடும்பத்தினர் தனிப்பட்ட சுதந்திரம் கருதி வேறு எந்தத் தகவலும் தெரிவிக்க முடியாது. அவர்களின் உணர்வுகளுக்கு ஊடகங்கள் மரியாதை கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். குழந்தைகளின் பெயர் விவரம் அளிக்கப்படவில்லை.
குண்டு வெடிப்புக்கு 3 குழந்தைகளை பறி கொடுத்த ஆன்ட்ரசனுக்கு ஸ்காட்லாந்து நாட்டில் 2 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1 சதவிகிதம் நிலம் அவருக்கு சொந்தமாக உள்ளது.
இங்கிலாந்து நாட்டில் அதிக அளவில் நிலம் சொந்தமாக வைத்திருப்பவர்களில் இவருக்கு இரண்டாவது இடம். இது தவிர 12 பெரிய எஸ்டேட்களும் உள்ளன. பெண்கள் உடையான வேரோ மோடா, ஜேக் அண்டு ஜான்ஸ் ஜீன்ஸ் போன்றவை ஆன்டர்சனுக்குச் சொந்தமான ‘பெஸ்ட் செல்லர்’ நிறுவனத்தின் தயாரிப்புகளில் பிரபலமானவை. #SriLankablasts
அமெரிக்காவில் பொம்மைகள் தயாரிப்பில் பிரபலமான பிஷர் பிரைஸ் நிறுவனம், குழந்தைகள் படுத்து உறங்குவதற்கான நவீன தொட்டில்களையும் தயாரித்து சந்தையிட்டு வருகிறது.
‘ராக் என் பிளே சிலீப்பர்ஸ்’ என்று அழைக்கப்படுகிற இந்த நவீன தொட்டில்களின் பாதுகாப்புத்தன்மை கேள்விக்குள்ளாகி இருக்கிறது.
இதற்கு காரணம், 2009-ம் ஆண்டு இந்த நவீன தொட்டில்களை சந்தையில் அறிமுகம் செய்த நாள் முதல், அவற்றில் படுத்து உறங்கிய 30 சின்னஞ்சிறு குழந்தைகள் இதுவரையில் பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க நுகர்பொருள் பாதுகாப்பு ஆணையம் (சிபிஎஸ்சி) விசாரணை நடத்தியது.
பிறந்து 3 மாதங்களே ஆன 10 குழந்தைகள், அந்த நவீன தொட்டிலில் படுத்து உறங்கியபோது, திரும்பிப்படுக்க முயன்று இறந்து விட்டதை தாங்கள் அறிந்திருப்பதாக அமெரிக்க நுகர்பொருள் பாதுகாப்பு ஆணையமே ஒப்புக்கொண்டது.
இதையடுத்து சந்தையில் உள்ள 50 லட்சம் நவீன தொட்டில்களை திரும்பப்பெற வேண்டும் என்று அமெரிக்க நுகர்பொருள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டது.
இதை பிஷர் பிரைஸ் நிறுவனத்தின் அதிபர் மேட்டல் உண்மைதான் என உறுதி செய்தார்.
திருவள்ளூர்:
‘டெங்கு’ காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர்.
தற்போது திருவள்ளூரை அடுத்த திருவலங்காடு ராஜேஷ் (20), முக்கரம்பாக்கம் பாஸ்கர் (38), விநாயகபுரம் முனி கிருஷ்ணன் (22) ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுதவிர 11 பேருக்கு டெங்கு அறிகுறி உள்ளது. இவர்களும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 78 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கான காரணம் குறித்து அறிய பரிசோதனை நடைபெறுகிறது.
இந்த நிலையில் மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
திருவள்ளூரை அடுத்த அதிகத்தூரை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மகள் அஜிதா (3). மர்ம காய்ச்சலுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இந்த குழந்தை குணம் அடைந்துள்ளதாக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அஜிதா இன்று பரிதாபமாக உயிர் இழந்தாள்.
திருவள்ளூரை அடுத்த சின்ன எடப்பாளையத்தை சேர்ந்தவர் கணேஷ். இவருடைய மகன் நித்திஷ் வீரா (6). மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவன் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். காய்ச்சல் குறையாததால் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டான். ஆனால் வழியிலேயே சிறுவன் நித்திஷ் வீரா பரிதாபமாக இறந்தான்.
டெங்கு காய்ச்சலுக்கு திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பகுதியை சேர்ந்த இரட்டை குழந்தைகள் சமீபத்தில் உயிர் இழந்தனர். இப்போது மேலும் 2 குழந்தைகள் மர்ம காய்ச்சலுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இறந்திருக்கிறார்கள்.
கொளத்தூர் தணிக்காசலம் நகரை சேர்ந்த இரட்டை குழந்தைகள் தீக்ஷா, தக்ஷின் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.
அவர்களின் உடல்களுக்கு மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. அஞ்சலி செலுத்தினார். குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் சுதர்சனம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
மாதவரம் தொகுதிக்குட்பட்ட பொன்னியம்மன் மேடு, பிரகாசம் நகர், தணிகாசலம் நகர், மாதவரம் பால்பண்ணை, பகுதிகளில் குடியிருப்பு இடங்களில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுகிறது.
குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தி ஆகி காய்ச்சல் பரவுகிறது. இது பற்றி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்கள் மெத்தனமாக உள்ளனர். குழந்தைகள் பலியானதற்கு அதிகாரிகளே காரணம்.
இதனால் தற்போது 2 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி விட்டனர்.
சுகாதாரப்பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் அறப்போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது முன்னாள் கவுன்சிலர் திருநாவுக்கரசு, முனுசாமி மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர். #DenguFever
மாதவரம்:
கொளத்தூர் தணிகாசலம் நகர் பொன்னியம்மன் மேடு பகுதியில் குடியிருப்பவர் சந்தோஷ்குமார். இவருடைய மனைவி கெஜலட்சுமி.
இவர்களுடைய மகன் தக்ஷன்(6), மகள் தீக்ஷா(6). இரட்டை குழந்தைகளான இவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலன் இன்றி 2 குழந்தைகளும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
தங்கள் இரண்டு குழந்தைகளும் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதால், பெற்றோர் கதறிதுடித்தனர். உறவினர்களும், பக்கத்து வீட்டுகாரர்களும் சோகத்தில் மூழ்கினார்கள்.
நான் அமுதம் அங்காடியில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறேன். 5 வருடங்களாக எங்களுக்கு குழந்தைகள் இல்லை. இதற்காக எனது மனைவி கெஜலட்சுமி சிகிச்சை பெற்றார். அதன்பிறகு இரட்டை குழந்தைகளாக தக்ஷன், தீக்ஷா பிறந்தார்கள்.
இருவருக்கும் 6 வயது ஆகிறது. அருகில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தனர். சில தினங்களுக்கு முன்பு 2 பேருக்கும் காய்ச்சல் வந்தது. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றோம். ஒரு வாரம் ஆனபிறகும் காய்ச்சல் குறையவில்லை. பரிசோதனை செய்து பார்த்தபோது வைரஸ் காய்ச்சல் என்றார்கள்.
எனவே, எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அப்போது டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிந்தது. 2 பேரும் நலமுடன் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகள் தீக்ஷா நேற்று இரவும், மகன் தக்ஷன் இன்று காலையும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 5 வருடம் தவம் இருந்து பெற்ற எங்கள் குழந்தை இறந்ததால் எங்கள் வாழ்க்கையையே இழந்து விட்டோம்.
இவ்வாறு கூறிய அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதார்கள்.
குழந்தைகள் இறந்த செய்தியை கேள்விப்பட்டதும் சந்தோஷ்குமார் மனைவி கெஜலட்சுமி மயங்கி விழுந்தார். உறவினர்களும், பக்கத்து வீட்டில் வசிப்பவர்களும் 2 குழந்தைகளை இழந்த இந்த தம்பதியினருக்கு ஆறுதல் கூறினார்கள்.
அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அனைவரும் அங்கு குவிந்தனர். அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது. #Denguefever
பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தின் பானியாபுர் பகுதியில் இன்று பள்ளி சிறுவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில், வேன் மீது மின்சாரம் பாய்ந்தது.
இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், 11 குழந்தைகள் மீது காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 3 பேர் கவலைகிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்